இதுதாங்க அமெரிக்கா கட்டுரைத் தொடர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, முதல் அத்தியாயம் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதுவரை பத்து அத்தியாயங்களும், மூன்றாவது அத்தியாயத்தின் தொடர்ச்சியாக 3.0 என்ற துணை அத்தியாயமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நடுவில் கடந்த ஆண்டின் சிறந்த தமிழ் வலைத்தளமாக கருத்துக்களம், வலை எழுத்தாளர்களின் தொகுப்பாளரான, நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை (அனைத்து மொழி வலைப்பூக்களும் அடக்கம்) கொண்ட IndiBlogger என்ற அமைப்பால் வல்லுநர்களை கொண்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்ற செய்தியையும் உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துக்கொண்டேன்.
முகப்பு கட்டுரையை தவிர்த்து, இதுவரை வெளிவந்த மொத்த அத்தியாயங்களையும் ஏழாயிரத்தி நூற்று எழுபத்தியாறு (7176) வாசகர்கள் படித்துள்ளார். வலைதளத்தில் எழுபத்தியாறு பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கு பின்னரும் எனது Whatsapp, Facebook பக்கங்களில் அவ்வப்போது சிலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.
நீங்கள் கருத்துக்களத்தின் புதிய வாசகராக இருந்தால், அமெரிக்காவைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கீழ் கண்ட அத்தியாயங்களை Season 2 வெளிவருவதற்கு முன் படியுங்கள்.
பத்தாவது அத்தியாயத்துக்குப் பின்னர் எனது YouTube சேனலில் சற்று கவனம் செலுத்தியமையால் கடந்த ஒரு மாதமாக புதிய அத்தியாயம் வெளியிடுவதில் தாமதமாகிவிட்டது.
இப்போது மீண்டும் இதுதாங்க அமெரிக்கா கட்டுரைத் தொடரை புதுப்பொலிவுடன் SEASON 2 (நாமும் சொல்லிக்கொள்ளலாமே!) என்று வெளியிடவுள்ளேன். தொடர்ந்து இணைந்திருந்து படித்து புதிய விஷங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த கட்டுரையில் எழுதப்படும் அனைத்து விஷயங்களும் நான் நேரடியாக காணும் எனது அனுபவம், செய்திதாள்களை போலோ, வாரப் பத்திரிகையை போலோ நான் எங்கும் சென்று ஆராய்ந்து முழு விபரங்களை வெளியிடுவதில்லை, அதனால் சில புள்ளி விபரங்கள் தவறாக இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பகிர்ந்துக்கொள்ளும் விஷயத்தில் ஏதும் தவறு இருப்பின் தாராளமாக அதை comments பகுதியில் தெரிவியுங்கள் (சில வாசகர்கள் ஏற்கனவே தவறை திருத்தியுள்ளனர்). மிக விரைவில் புதிய அத்தியாயம் வெளியிட முனைத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி!! நன்றி!!!
அருமையான பதிவு.
பதிலளிநீக்குமிகவும் நன்று ...
மேலும் தமிழ் செய்திகளுக்கு ..
மாலைமலர் | தினத்தந்தி
happened to visit your blog for the first time Went through your previous posts " Edhudhanga America" good and interesting.
பதிலளிநீக்குநன்றி சரவணன் அவர்களே!
பதிலளிநீக்குநன்றி ரமேஷ் அவர்களே :)
பதிலளிநீக்கு