பெங்களூரில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், வார இறுதிக்கு ஓசூர் சென்றுவிடுவேன். திங்கட்கிழமை காலை ஓசூரிலிருந்து கிளம்பி பெங்களூருக்கு வேலைக்கு செல்வேன். பெரும்பாலும் silkboard flyover மேல் செல்லும் பேருந்தில் தான் செல்வேன், குறைந்தபட்சம் நாற்பது நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க அதுதான் ஒரே வழி.
ஓசூர் பேரூந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு வண்டி கிளம்பும். அதிலும் பலவிதமான வண்டிகள் உண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து, தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் தனியார் வண்டி, கர்நாடக அரசு போக்குவரத்து, கர்நாடகாவிலிருந்து இயங்கும் தனியார் வண்டி, இதுதவிர தனியார் company கார்கள், வேன்கள் மற்றும் காலை நேரத்தில் ஓசூர்-பெங்களூர் ரயில் வண்டி. இப்படி பல விதத்தில் தத்தம் சௌகரியத்துக்கு ஏற்றார் போல பெங்களூர் செல்ல வசதிகள் உண்டு.
இந்த தனியார் வண்டிகளில் செல்லும்போது பலவந்தமாக சில மொக்கை திரைப்படங்களை திருட்டு சிடியில் போட்டு சித்திரவதை செய்வார்கள். எப்படா ஊர் வரும் என்றிருக்கும். அப்படிப்பட்ட மொக்கை படம் எடுத்து அதை திரையரங்கில் வெளியிடுபவர்களுக்கே முதலில் தண்டனை குடுக்க வேண்டும்! பல சமயம் வேறு வழி இல்லாமல் இந்த சசிகுமார், சில பொறுக்கிகளை ஹீரோவாக சித்தரிக்கும் படங்களை எல்லாம் தவிர்க்க முடியாமல் பார்த்து நொந்திருக்கிறேன். அதிலும் ஏதோ RDX, DTS இருக்கும் நடமாடும் திரையரங்கு நடத்துவதாக நினைப்பு அந்த ஓட்டுநர், நடத்துனர்களுக்கு - காது கிழியும் அளவுக்கு சத்தம் பின்னாடி வரும் அரசு பேருந்துக்கே கேட்கும்!
பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு புத்தகம் படிக்க light, சின்ன Fan இருக்கும் (நம் தமிழக அரசு UD வண்டி வந்த புதுசில் ஒரு குட்டி tablefan மாதிரி ஒன்றிருந்ததே... அதுபோல கிடையாது, lightடுக்கு பக்கத்தில் ceilingகுடன் சேர்ந்தாற்போல இருக்கும்). மேலும் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சீட்டுக்கு STOP என்ற button இருக்கும், அதை அழுத்தினால் "stop requested" என்று ஓட்டுநர் இருக்கைக்கு மேல் ஒரு digital displayவில் வரும், அதை பார்த்து அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவார். உள்ளூருக்குள் இயங்கும் பேருந்துகளில் வழக்கம் போல இரண்டு கதவுகளும், பஸ் பாஸ்களும் உண்டு, பஸ் பாஸ் மொபைல் போன், நம்மூரிலிருக்கும் அட்டை என்று பல விதங்களில் உண்டு.
அனைத்து பேருந்திலும் மாற்று திறனாளிகள் செல்லும் வகையில் வசதி இருக்கும், சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள், அந்த வண்டியுடனே பேருந்தினுள் ஏறும் வகையில் தானியங்கி கதவு தரையை ஒட்டி இறங்கும், சக்கர வண்டி உள்ளே சென்றவுடன் மற்றவர்கள் ஏறும் வகையில் படிகளை மேலே உயர்த்திவிடுவார் ஓட்டுநர். பெரும்பாலான பேருந்தில் முன் பக்கத்தில் மிதிவண்டி எடுத்து செல்லும்படி வசதி இருக்கும், ரயில்களில் பல பேர் மிதிவண்டி எடுத்து செல்வர். luggage எடுத்து செல்பவர் நம்மூர் kpn போன்ற தனியார் வண்டியில் கதவருகே இருக்கும் இடத்தில் luggage வைக்கும் இடம் போலவே இங்கு அனைத்து பேருந்துகளிலும் இருக்கும். பெரும்பாலான பேருந்தினுள் போன் பேசக்கூடாது. நம்மூரில் இப்படி இருந்தால், சம்மந்தமே இல்லாத ஒருவர் தன் ஊர் கதையை சொல்லிக்கொண்டு செல்வதை எல்லாம் கேட்காமலிருக்கலாம்!!! என்ன நடத்துனர் இல்லாமல் இருக்கும் இந்த பேருந்துகளில் தினமும் பயணம் செய்யும் பொது கேட்காமலிருக்கும் ஒரே சத்தம் நமூரில் கேட்கும் போலாம் ரைட்...

19 ரூபாய், 28 ரூபாய் பயண சீட்டு விலை இருந்த காலத்தில் அந்த மீதி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறையை வாங்க நாம் படும்பாடு சொல்லி மாளாது! அந்த "ரெண்டம்பது" வடிவேலு comedy தான் நினைவுக்கு வரும். ஒருமுறை ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து அருமையான காற்று வீசிக்கொண்டிருந்த அந்த அருமையான பயணம் இந்த கண்டக்டர் நம்ம பாக்கி சில்லறையை குடுப்பானா என்ற சந்தேகத்தினாலேயே ரசிக்க முடியாமல் போனது! சந்தேகித்தது சரிதான் என்னும் வகையில் வேறு யாரோ ஒரு பயணிக்கும், எனக்கும் சேர்த்து ஒரு பத்து ரூபாயை என்னிடம் குடுத்து ரெண்டுபேரும் அஞ்சஞ்சு ரூபாய் பிரிச்சு எடுத்துக்கோங்க என்று இறக்கிவிட்டார்!
இது போதாதென்று திங்கட்கிழமை காலையில் வழக்கமாக போகும் வண்டியையே சும்மா ஸ்பெஷல் பஸ் என்று ஒரு ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு, ஐந்து ரூபாயை கூட்டி டிக்கெட் விலையை விற்பதும், இதற்காக பயணிகளுக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடப்பதும் பலமுறை பெரும்பாலோனோர் அனுபவப்பட்ட விஷயங்கள். அந்தந்த நேரத்தில் இதெல்லாம் கடுப்பை கிளப்பும் நிகழ்வுகள் என்றாலும் இதெல்லாம் பெரும்பாலானோர் பலமுறை அனுபவப்பட்ட சம்பவங்கள் தானே!
காலை ஒன்பது மணிக்குமுன் பெங்களூரு பஸ் பிடிக்க வேண்டும் என்றால், பேருந்து நிலையத்தினுள் பஸ் நுழையும் முன்னரே பேருந்து நிலையத்தின் வாயிலிலிருந்து பஸ்சை துரத்தி சென்று உள்ளிருப்பவர்கள் இறங்குவதற்கு முன் அவர்களை மீண்டும் உள்ளேயே தள்ளி உட்கார வைக்கும் அளவுக்கு ஆக்ரோஷமாக போருக்கு செல்லும் வீரனை போல தள்ளுமுள்ளு நடத்தி, யோவ் இங்க நான் போட்ருந்த துண்டு எங்க? யோவ் அது என் கர்சீப்பு, குட்டி பசங்களை ஜன்னல் வழியே ஒரு மூணு பேர் சீட்டில் உக்கார வைத்து இடம்பிடிப்பது என்று பல வழிகளில் ஒரு மணிநேரம் செல்லும் பயணத்துக்காக ரகளை ரணகளமாக இருக்கும் பெரும்பாலான காலை நேரங்களில். (பின் குறிப்பு - மேற்கூறிய விஷயங்களில் துளியும் மிகைப்படுத்தி கூறவில்லை, நான் பெங்களூரு சென்ற சமயங்களில் நடந்த சில நிகழ்வுகள் தான் இவை.)
இப்படி ஓசூரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் சென்ற அனுபவம் பல இருக்க, இங்கு
நியூ ஜெர்சியியிலிருந்து நியூயார்க் செல்லும் அனுபவத்தைபற்றி தான் இந்த தலைப்பில் எழுதியிருக்கிறேன்.
நியூ ஜெர்சியியிலிருந்து நியூயார்க் செல்லும் அனுபவத்தைபற்றி தான் இந்த தலைப்பில் எழுதியிருக்கிறேன்.
முதல் நாள், நியூ ஜெர்சியில் நான் தங்கியிருக்கும் பார்சிபணியிலிருந்து (என்னது பாசிபருப்பா என்று தான் பலர் முதலில் கிண்டல் செய்வர், இந்த பெயரை முதலில் கேட்ட நான் உட்பட!) நியூயார்க் செல்ல பேருந்துக்கு காத்திருந்தேன். 7:20க்கு பேருந்து என்றால், 7:18க்கு பேருந்து நிறுத்தத்துக்கு சென்றால் போதும். சரியான நேரத்துக்கு பேருந்து வந்து நம்மை அசரவைக்கும்!அழகான பேருந்து நிறுத்தம். காத்திருந்தேன், நான் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றதற்கு முன் ஏற்கனவே ஒரு பெண் அங்கிருந்தார், அடுத்து நான் சென்றேன், பின்னர் இரண்டு பேர் வந்தனர். Bus Stop என்று வைத்திருந்த கம்பத்திற்கு முன் பேருந்து சரியாக நின்றது. (ஆச்சர்யம் தான்!)
அங்கிருந்தவர்கள் எங்கடா புஸ்ஸு, ஹாய் ஹூய் என்று எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், ஹாயாக கைபேசியை பார்த்துக்கொண்டும், பெரிய, சிறிய என்று ரகரகமான ear phoneகளில் பாட்டு கேட்டுக்கொண்டும் நின்றிருந்தனர். நிழற்குடையினுள் நின்று இதையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டும், நொடிக்கு ஒருமுறை இடப்புறம் திரும்பி பேருந்து வருகிறதா என்று பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் நாளல்லவா! பதட்டம் இருக்காதா என்ன?!
அதுவரை நிழற்குடையினுள் காத்திருந்த நான், பேருந்து வந்ததை பார்த்தவுடன் குடுகுடுவென முதலில் பேருந்தினுள் ஏற விரைந்து சென்றேன், புஸ்ஸ்ஸ் என சத்தத்துடன் பஸ்ஸின் கதவு திறந்தது (நம் ஊர் பேருந்துகளில் கதவை கயிற்றால் கட்டும் வழக்கம் இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!), எனக்கு முன்னரே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து காத்திருந்த பெண்மணி என்னை முறைக்காத குறையாக ஒரு மாதிரி பார்த்தார்... அப்போதான் சட்டென நினைவுக்கு வந்தது அடடா இது வெளிநாடு ஆச்சே!! இங்கே இப்படி எல்லாம் அடித்து பிடித்து என்ற மாட்டார்களே! என்று எங்கெங்கோ நான் படித்த, கேட்ட விஷயங்களெல்லாம் நினைவுக்கு வந்தது... உடனே பேச்சை மாற்றுவது போல ஏங்க... இந்த பஸ் நியூயார்க் போகுமா? என்று கேட்டு அவரை முன்னே செல்ல விட்டு என் வரிசையில் நான் ஏறினேன்.
பேருந்து நிறுத்தம் என்றாலும், பேருந்து நிலையம் என்றாலும், எத்தனை நபர்கள் இருந்தாலும் இங்கே First Come, First Serve தான். நாம் எந்த வரிசையில் ஒரு இடத்திற்கு செல்கிறோமோ அந்த வரிசையில் நமக்கான இடம் இருக்கும். ஓவுவர் பின் ஒருவராக மிக நீண்ட வரிசை நிற்கும் பெரிய பெரிய பேருந்து நிலையங்களில்! நூறு பேருக்கு மேலெல்லாம் நீண்ட வரிசையில் நிற்பதை தினமும் பார்க்கிறேன் தினமும். சில படங்கள், வீடியோ இங்கே கொடுத்துள்ளேன் காணுங்கள்.
இந்த படத்தை பார்த்துவிட்டு இதுதான் அந்த அழகான பேருந்து நிறுத்தமா என்று கேட்டுவிடாதீர்கள், இது நியூயார்க் பேருந்து நிலையம். நான்காவது மாடியிலிருக்கும் பேருந்து நிலையம். சாலையிலிருந்து flyover ஒன்று பேருந்து நிலையத்தின் கட்டிடத்துக்கு ஒவ்வொரு மாடிக்கு செல்லும்.
Port Authority Bus Terminal - இந்த பேருந்து நிலையத்தில் தான் இந்த வாரம் குண்டு வெடித்தது. |
அப்படியாக முதல் நாள் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் எனது பயணசீட்டை கொடுத்துவிட்டு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தேன். இங்கே நடத்துனர் என்று தனியாக பேருந்துகளில் கிடையாது. நியூஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்லும் பேருந்துகளுக்கு ஒரு கதவு தான். ஜன்னல்கள் எந்த பெருந்திலுமே கிடையாது, பெரிய முழுநீள கண்ணாடியுடன் தான் எல்லா பேருந்துகளும் இருக்கும். பேருந்தில் ஏறும்போது எந்த நிறுத்தம் என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமரவேண்டும், எல்லா இருக்கையும் நிறைந்திருந்தால் அடுத்த பேருந்தில் செல்ல சொல்லி, ஓட்டுனரே Walkie Talkie radioவில் operatorரிடம் சொல்லிவிடுவார். அடுத்த ஐந்து நிமிடத்தில் அடுத்த பேருந்து வரும். சில மாநிலங்களில் இது மாறுபடும். எல்லா மாநிலங்களிலும் இங்கு பேருந்து வசதி கிடையாது. குறிப்பாக லாஸ் எஞ்சலஸ், விர்ஜினியா போன்ற மாநிலங்கள். மற்ற இடங்களில் மணிக்கு ஒருமுறைதான் பேருந்து வசதி உண்டு. சில இடங்களில் அதுவும் கிடையாது.
பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு புத்தகம் படிக்க light, சின்ன Fan இருக்கும் (நம் தமிழக அரசு UD வண்டி வந்த புதுசில் ஒரு குட்டி tablefan மாதிரி ஒன்றிருந்ததே... அதுபோல கிடையாது, lightடுக்கு பக்கத்தில் ceilingகுடன் சேர்ந்தாற்போல இருக்கும்). மேலும் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சீட்டுக்கு STOP என்ற button இருக்கும், அதை அழுத்தினால் "stop requested" என்று ஓட்டுநர் இருக்கைக்கு மேல் ஒரு digital displayவில் வரும், அதை பார்த்து அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவார். உள்ளூருக்குள் இயங்கும் பேருந்துகளில் வழக்கம் போல இரண்டு கதவுகளும், பஸ் பாஸ்களும் உண்டு, பஸ் பாஸ் மொபைல் போன், நம்மூரிலிருக்கும் அட்டை என்று பல விதங்களில் உண்டு.
ஒவ்வொரு பேருந்திலும் Heater, AC இரண்டுமே இருக்கும். பருவநிலைக்கு ஏற்ப ஓட்டுநர் அதை இயக்குவார். பெரும்பாலான ஓட்டுனர்கள் மிக தன்மையாக அனைவரிடமும் நடந்துகொள்வர். ஒருமுறை, ஒரு தாத்தாவை இறக்கிவிட ஓட்டுனரே பஸ்சிலிருந்து இறங்கி கொண்டுவிட்டார். இவ்வளவு கனிவு எல்லாம் நம்ம ஊருல எதிர்பார்க்கவில்லை, காலங்கார்த்தால பீப் போடும் அளவு கொச்சையாக ஓட்டுநர், நடத்துனர் பேசாமல் இருந்தாலே போதும் என்று தான் பல சென்னை வாசிகள் நினைப்பர். அவ்வளவு கனிவாக நடந்துக்கொள்வர் இங்கே.
ஒவ்வொரு பயணியரும் பேருந்தில் ஏறியதும் Good Morning அல்லது how are you doing என்றும் பேருந்திலிருந்து இறங்கும் போது Have a nice day அல்லது have a good one என்றும் சொல்லிவிட்டுத்தான் ஏறுவர், இறங்குவர். ஒவ்வொரு பயணியருக்கும் ஓட்டுனர் சிரித்தமுகத்துடனே பதிலளிப்பார். இதே பாணிதான் காபி கடை, taxi மற்றும் எல்லாஇடங்களிலும். முதலில் greet செய்துவிட்டு தான் அடுத்த பேச்சு!

படம்: Dummys Photography |
பெரும்பாலும் அனைத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகள்தான். NJ Transit, Lakeland, Coach USA என்று பல lease, sublease என்று அரசாங்க மானியத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள். பேருந்துகள் மட்டுமல்லாது ரயில்களும் தனியார் இயக்கம் தான். NJ Transit Train, Path Train, Bus, ferry (படகு) என்று பல வகையில் நியூ ஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்ல வசதிகள் உண்டு. இத்தனை விதமாக இருந்தாலும் கட்டணமெல்லாம் அதிகம் தான், மாதம் பேருந்துக்கே $400 ஆகும்! நியூயார்க்கு பக்கத்திலேயே இருந்து ரயிலில் செல்பவர்களுக்கு $100க்குள் முடிந்துவிடும்.
மாற்று திறனாளிகள் தங்கள் சக்கரவண்டியை பேருந்தினுள் எடுத்து செல்லும் வகையில் கதவை இயக்கும் ஓட்டுநர். |
பெரும்பாலான பேருந்து நிறுத்தத்தில் "park & ride" என்று உண்டு. எல்லோருக்குமே வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் பேருந்து நிறுத்தம் இருக்காது, பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு காரில் சென்று, அங்கே காரை நிறுத்திவிட்டு பஸ் பிடித்து வேலைக்கு செல்வர். அப்படி பேருந்தில் செல்பவருக்கான வண்டி நிறுத்தும் இடம் தான் இந்த Park & Ride, இங்கு காலை முதல் மாலை வரை காரை நிறுத்துவிட்டு செல்ல தனியாக கட்டணமெல்லாம் கிடையாது! காலை பொழுதில் நியூயார்க் செல்லும் பேருந்துக்கு என, எதிர்புறம் வண்டி வரும் பக்கத்தில் ஒரு lane பேருந்துக்கு என ஒதுக்கியிருப்பார்கள். காலை பத்து மணி வரை இந்த bus lane இயங்கும்.
அனைத்து பேருந்திலும் மாற்று திறனாளிகள் செல்லும் வகையில் வசதி இருக்கும், சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள், அந்த வண்டியுடனே பேருந்தினுள் ஏறும் வகையில் தானியங்கி கதவு தரையை ஒட்டி இறங்கும், சக்கர வண்டி உள்ளே சென்றவுடன் மற்றவர்கள் ஏறும் வகையில் படிகளை மேலே உயர்த்திவிடுவார் ஓட்டுநர். பெரும்பாலான பேருந்தில் முன் பக்கத்தில் மிதிவண்டி எடுத்து செல்லும்படி வசதி இருக்கும், ரயில்களில் பல பேர் மிதிவண்டி எடுத்து செல்வர். luggage எடுத்து செல்பவர் நம்மூர் kpn போன்ற தனியார் வண்டியில் கதவருகே இருக்கும் இடத்தில் luggage வைக்கும் இடம் போலவே இங்கு அனைத்து பேருந்துகளிலும் இருக்கும். பெரும்பாலான பேருந்தினுள் போன் பேசக்கூடாது. நம்மூரில் இப்படி இருந்தால், சம்மந்தமே இல்லாத ஒருவர் தன் ஊர் கதையை சொல்லிக்கொண்டு செல்வதை எல்லாம் கேட்காமலிருக்கலாம்!!! என்ன நடத்துனர் இல்லாமல் இருக்கும் இந்த பேருந்துகளில் தினமும் பயணம் செய்யும் பொது கேட்காமலிருக்கும் ஒரே சத்தம் நமூரில் கேட்கும் போலாம் ரைட்...
அடுத்த அத்தியாயம் விரைவில்...
"நீரும் நானும்" என்ற பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது. "நியூ யார்க்கிலுள்ள வாட்கின்ஸ் க்லென்- ஓசூர் பார்கவ் கேசவன்" என்ற தலைப்பில் இந்த இணைப்பில் http://www.bbc.com/tamil/arts-and-culture-42276359 படத்தை காணவும். நான் எடுத்த மற்ற புகைப்படங்களை காண முகநூலில் என் Dummys Photography என்ற எனது புகைப்பட பக்கத்தை பின்தொடரவும். https://www.facebook.com/dummysphotography/
இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக