சரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று பார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வீட்டு வாடகை குறைந்த பட்சம் மாதம் நம்மூர் விலைமதிப்பில் 48,750 ரூபாய் ($750) முதல் 1,23,500 ரூபாய் ($1900) வரை. அம்மாடியோவ்!!!
நிச்சயம் பல எழுத்துப் பிழைகள் இருக்கும், அவ்வப்போது அதை சரிசெய்கிறேன். |
அத்தியாயம்-4
வீட சுத்தி பாத்தாச்சு, சரி வெளிய போயிட்டு வரலாம் வாங்க... மாப்ள, அந்த ரோட அப்டியே உத்துப் பாத்தோம்னா, மூஞ்சி தெரியும்டா மூஞ்சி... என்று வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை போல தான் பெரும்பாலான ரோடு இருக்கும், என்ன... மூஞ்சி எல்லாம் தெரியாது... ஆனா கண்டிப்பா அப்டியே ரோட்டுல உக்காந்து அரட்டை அடிக்கலாம் போல இருக்கும். பல தடவை நம் நாடு இப்படி இல்லையே என்று பொறாமை கொண்டுள்ளேன், சில நேரம் எப்படி தான் டா மக்களுக்காக இவ்வளவு யோசிக்கிறீங்க என்று கோவம் கூட கொண்டுளேன், இதுக்கு ஏன் கோவம்? எந்த இடத்துல கோவம் என்று சற்று நேரத்தில் பாப்போம்.
அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் உள்ளன. நாற்பத்தி எட்டு மாநிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாக மற்றும் அலாஸ்கா, ஹவாய் தீவு இது இரண்டு மாநிலங்கள் அமெரிக்காவிலிருந்து தொலைவிலும் உண்டு. நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த Washington D.C மாநிலம் அல்ல, அதை Federal District என்பார்கள். இது தவிர அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவுக்கு எப்படி அந்தமான், நிக்கோபார், lakshadweep தீவுகளோ, அது போல பல தீவுகள் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. என்ன, நம் தீவுகள் போல பக்கத்திலேயே இல்லாமல் பல ஆயிரம் மயில்கள் கடந்தெல்லாம் கூட அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் தீவுகள் உள்ளன. சரி, இதெல்லாம் தான் Wikipedia பார்த்தாலே தெரிந்துவிடுமே, நம்ம விஷயத்துக்கு வருவோம்.
இப்படியாக ரொம்பவே பறந்து விரிந்து கிடக்கும் தேசமான அமெரிக்காவின் சாலைகள் எப்படி இருக்கும்? முதலில் வீடு வாசலிலிருந்து ஆரமிப்போம். நான் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் நான்கு மாதத்திற்கு முன் ரோடு போட்டார்கள். இதற்கு முன்னிருந்த ரோடு நான் இங்கு வருவதற்கு முன்னரே எப்போதோ போட்ட ரோடு. குறை சொல்லும்படி மோசமாகவெல்லாம் இல்லை. நன்றாக தான் இருந்தது. ரோடு பழையது ஆகியிருந்தமையாலும், ஆங்காங்கே சற்று விரிசல் விட்டிருந்தமையாலும் புதிதாக ரோடு போட்டார்கள். இது, ஒரு private community management போட்ட ரோடு.
இதற்கு முன் வெளியே உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் பொது சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி ஓர் ஆச்சர்யமாக இருந்தது. என்னவென்றால், நம்மூரில்/நம்நாட்டில் தெருவில் எப்படி ரோடு போடுவார்கள்? ஏற்கனவே இருக்கும் குண்டும் குழியுமான ரோட்டை துடைப்பத்தால் பெருக்கி, அதன் மேல் ஜல்லி கற்களை கொட்டி, Road rollerஐ விட்டு ஒரு முறை ஏற்றி, அதன் மேல் தாரை ஊற்றி போடி ஜல்லிகளை போட்டு மீண்டும் ரோடு ரோலரை ஓட்டி ரோடு போட்டு, இரண்டு ஆதி இருந்த ரோட்டை எப்பெப்பலாம் பணம் கொள்ளை அடிக்கவேண்டுமோ அப்போவெல்லாம் இதே போல ரோடு போட்டு அடிக்கு மேல் அடி ரோடு போட்டு வீடுகளை எல்லாம் குழிக்குள் காட்டியது போல ஆகி விடுவார்கள் அல்லவே? அதனால் தானே சிறிது மழை வந்தாலும் நம் வீட்டினுள்ளே எல்லாம் தண்ணீர் வந்துவிடுகிறது.
நாம் வீடு கட்டும்போது ரோட்டை விட இரண்டடி உயரத்தில் கட்டினால், இரண்டே வருடத்தில் ரோடு வீட்டுக்கு சமமாக வந்துவிடும். அரசு எவனோ ஒருத்தனோட மச்சானுக்கோ, மாமனுக்கோ contract கொடுத்து, அவன் ஒரு பத்து பேரை எவ்வளவு அடிமட்டமா சம்பளம் குடுக்க முடியுமோ அவ்வளவு அடிமட்டமாக சம்பளம் கொடுத்து அழைத்து வந்து எவ்வளவு நீளம், அகலமான தெருவாக சாலையாக இருந்தாலும் பொசுக்கென்று மூன்று அல்லது நான்கே நாட்களில் ரோடு போட்டு முடித்துவிடுவார்கள்.
என்னமோ ஒழுங்கா ரோடு போட்டு கிழுச்சுடறா மாதிரி மூணு மாசம் தெருவுல ஜல்லி, மண்ணு எல்லாம் கொட்டி வெச்சு ஓரத்துல ஒரு ரோடு ரோலரையும் நிக்க வெச்சுட்டு போயிடுவானுங்க, ஏன்னா மூணு மாசமா ரோடு போடா மாதிரி ரோடு ரோலருக்கு தினா வாடகை, மூணு மாசமா பணியாட்களை தினக்கூலி மற்றும் பேட்டா என்று எல்லாவற்றையும் கணக்கு காண்பித்து கடைசி நான்கு நாட்கள் மட்டும் அரக்க பறக்க ரோடு போட்டு சென்று விடுவார்கள். இவன் (ரோடு போட்டவன்) போன பின் அப்போதுதான் நாம் ஒரு பெரு மூச்சு விட்டு, இது எத்தனை நாளைக்கோ என்று நினைத்து நன்றாக இருக்கும் ரோட்டைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரிக்க ஈஈ என்று ஆரமிப்போம், அதற்குள்ளேயே இத்தனை நாட்கள் நன்றாக தூங்கி விட்டு என்னமோ குடி முழுகி போவதுபோல BSNL காரன் வருவான். என்னமோ அவன் சோற்றில் முடி விழுந்ததை எடுத்து போடுவது போல, அப்போதுதான் புதிதாக போட்ட ரோட்டை நம் கண்முண்ணேயே நோண்டி போட்டு என்னமோஅலுவலகத்திலேயே மறந்து வைத்தவன் போல அப்படியே மூடாமல் கூட போய்விடுவான்!
அப்படி ஒருவேளை யார் செய்த புண்ணியதாலோ BSNLகாரன் வரவில்லை என்றால், யாரோ செய்த புண்ணியத்துக்காக மழை வரும். பாவம் அது என்னமோ நம் நன்மைக்காக தான் வரும். ஆனால் இந்த அரைகுறைகள் போட்ட அரைகுறை ரோடு தான் லட்டு கீழே விழுந்து பூந்தி ஆவதை போல, மழை துளிகள் விழுந்த உடனேயே ஜல்லி ஜல்லியாக ரோடு பிரிந்து வந்துவிடும்.
இதை எல்லாம் நினைத்தால் கோவம் வராதா என்ன? இப்படித்தான் அன்று உழவர் சந்தை சென்ற போது இந்நாட்டவர் இங்கு ரோடுவதை பார்த்த மறுநொடியில் எனக்கு கோபம் வந்தது. சேரி அப்படி என்ன தான் பண்ணாங்க சொல்லித் தொலையேன் என்று தானே கேட்கிறீர்கள். இதோ...
ஒரு சாதாரண தெரு, அந்த தெருவில் ரோடு போட, ஏற்கனவே இருக்கும் ரோட்டை "Cakeஐ வெட்டுவதுபோல" அப்படியே வறண்டி, நோண்டி ஏற்கனவே இருந்த தார் எதுவும் இருந்த சுவடு தெரியாமல் எடுத்துவிட்டு. தெருவை சுத்தம் செய்யும் வண்டி மூலம் நோண்டிய இடத்தை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு பின்னர் அதன் மேல் ரோடு போடுவார்கள், இது போட்டு முடித்தபின்னர்... ரோட்டின் இடது பக்கமும் வலதுபக்கமும் (Dividerருக்கு இடது, வலது) சிறு பிசுறு தெரியாமல் ஒரே சமமாக இருக்கும். அதன் பின்னர் அடுத்த பக்கத்தை நொண்டியெடுத்து ரோடு போடுவார்கள்.
என் மனைவியுடன் நான். படம் எடுத்தவர் என் நண்பர் பிரவீன் கண்ணன். |
சாலையின்இடது பக்கம் ரோடு போட்டுக் கொண்டிருக்க, வலது பக்கம் வண்டிகள் எல்லாம் சென்றுக் கொண்டுதான் இருக்கும். இதை ரோடு போடுபவருள் ஒருவர் கையில் STOP என்ற signboardஐ வைத்துக்கொண்டு எதிர் எதிர் வரும் வண்டிகளை நிறுத்தி நிறுத்தி இருபுறமிருக்கும் வண்டியையும் போக்குவரத்து நெரிசல் ஆகாமல் அனுப்பிக்கொண்டிருப்பார். அவர் காண்பிக்கும் boardஐ மதித்து மக்களும் வண்டியை நிறுத்துவார்கள்.
மேலே சொன்னது வெறும் சாதாரண தெருவில் இருக்கும் ரோடு போடுவது பற்றி. இதுவே நெடுஞ்சாலை என்றால் நினைத்துப் பாருங்கள். விஷயம் என்னவென்றால்
1. ரோடு போடும் பொது மக்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது.
2. ரோடு போடும் பணியாளரின் பாதுகாப்பு மிக முக்கியம்.
3. நம்மை அவர்கள் மதிப்பார்கள், நாம் அவர்களை மதிக்க வேண்டும்.
அவ்வளவுதான். நெடுஞ்சாலையில் எங்கேனும் சாலை பனி நடக்கிறது என்றால், கிட்டத்தட்ட ஒரு ஐந்து, சில இடங்களில் பத்து மைல்கள் முன்னிருந்தே Digital sign boardஇல்
Road Work Ahead...
Road Work in 3 miles...
Road work in 1 mile
End of Road Work என்று தேவையான அளவுக்கு எச்சரிக்கைசெய்து வைப்பார்கள்.
நம் நாட்டில் பள்ளி முன்பு, அரசு மருத்துவமனை முன்பு Go Slow, No Horn என்றெல்லாம் signboard இருக்கும், சிலர் அதை மதித்தாலும் பெரும்பாலானோர் அதை மதிக்க மாட்டார்கள், மதிக்கா விட்டாலும் எந்த தண்டனையும் இல்லை, அபராதமும் இல்லை. மேலும் வேகத்தடை ஆங்காங்கே இருக்கும், ஆட்டோ ஓட்டுநர் ஆகட்டும், taxi ஓட்டுபவராகட்டும் அந்த வேகத்தடையின் ஒரு ஓரத்துக்கு சென்று வண்டியின் ஒரு சக்கரத்தை வேகத் தடை இல்லாத பகுதியில் கொண்டு சென்று ஏதோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் (ஹ்ம்ம்... எனக்கும் அந்த வடிவேலு, சரத்குமார் படம் நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது!) வாங்குவதுபோல வண்டியை ஓடுவார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் வேகத்துக்கு ஒரு அளவு என்ன என்று யாருக்குமே தெரியாது. நிச்சயமாக போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்பவருக்கு கூட எங்கே எந்த அளவிலான வேகத்தில் செல்ல வேண்டும் என்ற அளவு தெரியாது.
ஆனால், இங்கு... ஒவ்வொரு தெருவிலும் 35 மைல் வேகத்தில் தான் வண்டி செல்ல வேண்டும், பள்ளி இருக்கும் பகுதியில் 25 மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் வேகத்துக்கான Signboard இருக்கும், அதை கண்டிப்பாக பார்த்து அதற்கு ஏற்ற வேகத்தில் தான் வண்டி ஓட்ட வேண்டும். அதெப்படி வண்டி ஓட்டும் போது இதெல்லாம் பார்க்க முடியுமா என்றால், ஆம் நிச்சயம் முடியும். ரொம்ப சோம்பலாக இருந்து வேகத்தடையை பார்க்காமல் சற்று தான் வேகமாக போகலாமே யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்து போயிதான் பாருங்களேன். பதுங்கியிருக்கும் புலி பாய்வதுபோல சட்டென்று பின்னே Police வண்டி வந்து நம்மை ஓரம் கட்ட சொல்லி, ஒரு அபராதம் மாற்றும் இரண்டு pointகள் கொடுத்து அடுத்த வண்டியை பிடிக்க சென்று விடுவார்கள். (அதென்ன points? அதை ஓட்டுநர் உரிமம் பற்றிய அத்தியாயத்தில் பார்ப்போம்.)
ஆனால், இங்கு... ஒவ்வொரு தெருவிலும் 35 மைல் வேகத்தில் தான் வண்டி செல்ல வேண்டும், பள்ளி இருக்கும் பகுதியில் 25 மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் வேகத்துக்கான Signboard இருக்கும், அதை கண்டிப்பாக பார்த்து அதற்கு ஏற்ற வேகத்தில் தான் வண்டி ஓட்ட வேண்டும். அதெப்படி வண்டி ஓட்டும் போது இதெல்லாம் பார்க்க முடியுமா என்றால், ஆம் நிச்சயம் முடியும். ரொம்ப சோம்பலாக இருந்து வேகத்தடையை பார்க்காமல் சற்று தான் வேகமாக போகலாமே யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்து போயிதான் பாருங்களேன். பதுங்கியிருக்கும் புலி பாய்வதுபோல சட்டென்று பின்னே Police வண்டி வந்து நம்மை ஓரம் கட்ட சொல்லி, ஒரு அபராதம் மாற்றும் இரண்டு pointகள் கொடுத்து அடுத்த வண்டியை பிடிக்க சென்று விடுவார்கள். (அதென்ன points? அதை ஓட்டுநர் உரிமம் பற்றிய அத்தியாயத்தில் பார்ப்போம்.)
சென்ற அத்தியாயம் ஆரம்பத்தில் பருவமாற்றத்தின் இலைகள் நிறம் மாறுவதை பார்க்க சென்றேன் என்று சொன்னேன் தானே, அங்கே எடுத்ததில் ஒரு படம். |
அட என்னப்பா நீ இப்படி சொல்லிட்ட, அமெரிக்கால தான அதிவேக race car எல்லாம் இருக்கு என்று நீங்கள் கேட்கலாம், எந்த வண்டியாக இருந்தாலும் ஆங்காங்கே என்ன வேக அளவு கொடுக்கப் பட்டுள்ளதோ அதில் தான் செல்ல வேண்டும். நமூரில் Highway என்று சொல்வதுபோல இங்கு Freeway என்பார்கள். அதில் மூன்று Laneகள் இருக்கும். இடது Lane passing lane என்று பெயர். அதாவது ஒரு வண்டியை overtake செய்ய வேண்டும் என்றால் மட்டும் அந்த லேனில் செல்ல வேண்டும், overtake செய்துவிட்டு மீண்டும் நடு லேனுக்கே வந்து விடவேண்டும். கடைசி lane மெது lane கொஞ்சம் பொறுமையாக ஓடிக்கொள்ளலாம், ஆனால் Minimum speed கடைபிடிக்க வேண்டும். சில மாநிலங்களில் குறைந்தபட்சம் 40MPH (Mile per hour) வேகத்தில் தான் செல்ல வேண்டும்.
படம்: Dummy's Photography (அதுவும் நான்தான்) |
இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் Shoulder என்ற ஒன்று. அதாவது மேல சொன்ன மூன்று laneகள் போக முக்கிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும் சாலையின் இடது பக்கத்தில் அந்த மெது லேனுக்கு அடுத்து ஒரு lane இருக்கும், அதன் பெயர் Shoulder, இதில் வண்டிகள் ஓட்டி செல்லக் கூடாது. அவசரத்திற்கு நிறுத்துவதற்கு மட்டும் தான் இந்த lane. ஆஹாம்... அந்த அவசரமில்லை... இது முக்கியமாகவே ஏதாவது அவசரம், அவசியம் என்றால் இங்கு நிறுத்திக்கொள்ளலாம். அந்த அவசரம் பற்றி அடுத்த வரம் எழுதுகிறேன். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலையின் இரண்டு பக்கமும் ரோட்டை சிறிது சிறிதாக செதுக்கியிருப்பார்கள். அதாவது சாலையில் இருக்கும் கடைசி லேனிலிருந்து (கோட்டிலிருந்து) கவனம் இல்லாமல் வெளியே செல்கிறோம் என்றால், அந்த செதுக்கிய இடத்தின் மேல் வண்டி செல்லும்போது டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வண்டி அதிரும் (vaibrate ஆகும்). இது ஒரு அற்புதமான விஷயம், இரவில் ஒரு வேலை தூங்கி விட்டாலோ, கண் அசந்து விட்டாலோ சாலை ஓரத்தில் இருக்கும் தடுப்பில் மோதியோ, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் வாரியில் மோதியோ விபத்து ஆகாமலிருக்க இது முக்கிய உதவியாக இருக்கும். சட்டென்று அந்த நொடியில் எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் அதிர்ந்து முழித்து விடுவோம்.
நினைவிருக்கிறதா? இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏதோ பொறாமை வரும், கோவம் வரும் என்றெல்லாம் சொன்னேனே? அதில் பாதி எந்த இடத்தி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். மீதி என்ன என்றால்... இப்படி பறந்து கிடைக்கும் அமெரிக்காவில் காட்டுக்கு நடுவே சென்றாலும் சாலை அற்புதமாக போடப் பட்டிருக்கும், ஒருசில இடம் கன்னாபின்னா மேடு, ஒரு வீடும் கண்ணுக்கு தென்படவில்லையே, இந்த பக்கம் ஒன்னும் இல்லையே, இது அடர்ந்த காடாச்சே, என்று என்னென்ன தோணுமோ அந்தந்த இடத்துக்கு சென்றாலும் அங்கெல்லாம் "தரமான ரோடு" போடப் பட்டிருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் நான் குறைந்தது இருபதாயிரம் மைல்கள் பயணித்திருப்பேன், முகம் சுழிக்கும் அளவு எங்கும் சாலையை கண்டதில்லை.
பனிக்காலத்தில் சாலையில்.. சரி அடுத்த வார அத்தியாயத்தின் முன்னே சாலையைப் பற்றிய இந்த கடைசி விஷயத்தையும் சேர்த்துக்கொள்கிறேன்.
*** ஐந்தாம் அத்தியாயம் அடுத்த வாரம் வெள்ளி வெளிவரும் ***
நான் எடுத்த மற்ற படங்களை பார்க்க இங்கே இதை கிளிக் செய்யவும் https://www.facebook.com/dummysphotography/
அருமையாக எழுதி இருந்தீர்கள். பாராட்டுக்கள். போன வாரம் தான் மத்திய பிரதேச முதல்வர் தம் மாநிலத்தில் அமெரிக்காவைவிட சிறந்த சாலைகள் உள்ளது என்று போற்றி கொண்டார். அப்படி இருந்தால் சந்தோசமே.
பதிலளிநீக்குஅநேக இடங்களில் பொது பனி துறை வேலை நடந்து கொண்டு இருக்கும் இடத்தில் " Your Tax Dollars at Work" என்று ஒரு பலகை வைக்க பட்டு இருக்கும். அதை காணும்போது.. மனதில் ஒரு நிம்மதி.
தொடர்ந்து எழுதுங்கள்.
விளக்கப் படங்களுடன் சுவாரஸ்யமான தகவல்கள். பொறாமையாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்கு@விசுAWESOME அவர்களே, தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. // Your tax dollars at work// - அருமை!
பதிலளிநீக்குஶ்ரீராம் அவர்களே - மிக்க நன்றி :)
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குAmerica is the largest debtor nation in the world overspending at more than 14 trillion dollars all borrowed by these municipal town corporations and called counties issuing junk bonds to the Chinese !! India need not borrow like this breakneck speed and put such fantastic faclities borrowing from China to put up roads! No country in the world borrows like as though no tomorrow and so need not go tags over this !!!
பதிலளிநீக்குநன்றி திரு.ராஜா அவர்களே!
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, உப்பிலி அவர்களே. ஆம் இந்தியா கடன் வாங்க தேவை இல்லை, ஆனால் இருக்கும் பணத்தில் ஏன் பண்ணக் கூடாது என்பதுதான் வருத்தமே!
பதிலளிநீக்கு