சமீப காலமாக மக்கள் மத்தியில் தலை வலியாக இருந்து வருவது விலை உயர்வு.
நமக்குள்ளேயே புலம்பிக்கொள்வதால் ஒன்றும் பெரிதாய் நடந்திவிட போவதில்லை.
பத்து வருடத்திற்கு முந்தய S.Ve.Shekher நாடகம் "நம் குடும்பம் - பெட்ரோல்" இன்று கேட்டுக் கொண்டிருக்கும்போது செய்தி வந்தது, இன்றைய பெட்ரோல் விலை உயர்வு ஏழு ரூபாய் ஐம்பது காசு என்று!
வாய் விட்டு சிரிப்பு வந்தது, காரணம் அப்போதுதான் அந்த நாடகத்தில் ஒரு வசனம் "பெட்ரோல் விலை ஆகாசத்துல விக்குது, பதினோரு ருபாய் ஐம்பது காசுங்கறான்" என்று அந்த வசனம் தொடரும்!
ஆக, எப்பொழுதுமே இந்த விலை உயர்வு இருந்துக் கொண்டே தான் இருக்கிறது!
சரி, புலம்பிக்கொண்டே நாமும் தொடர்ந்து வாங்கிக்கொண்டிருப்பதால் அதுவும் ஏறிக்கொண்டே போகிறது!
இதனை ஒரு காரணமாகக் கொண்டு,ஒவ்வொருவர் தனி தனியாக செல்ல ஒரு நன்கு சக்கர வாகனம் இருக்கும் இந்த காலத்தில், குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது முன்பு சென்றது போல பொது வாகனத்தை பயன் படுத்துவதும்...
இரண்டு தெரு கடந்து இருக்கும் கடைக்கும் வண்டியில் போவது, நடக்கும் தூரம் இருக்கும் உணவு விடுதிக்கு சாப்பிடபோகும் போதும் வாகனத்தை தவிர்ப்பதும்.. நமது பழைய நடை பழக்கத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டும்!
udalukkum manathirkum naatirkum nallathu !!!
பதிலளிநீக்குஆம் நண்பரே, உண்மை!
பதிலளிநீக்கு