எமது வலைப்பூ புதுப் பெயர் பெறுகிறது...
கருத்துக்களம்.காம்
இதுவரை...
மார்ச்சு 2011இல் தொடங்கப்பட்ட எமது வலைப்பூவில் இன்று நாற்பத்து ஒன்றாம் பதுவு வெளியிடப்படுகிறது.
இதுவரை வெளியாகிய நாற்பது பதிவுகளில் எமது சிந்தனையில் தோன்றிய இருபத்தி மூன்று பதிவுகளும், எமது வலைப்பூவின் இணை ஆசிரியர் ஆனந்த் சுரேஷ் பத்தித்த ஆறு கட்டுரைகளும் மட்டும் அல்லாது, பிற ஊடகங்களில் யாம் படித்த கருத்துகள் அடங்கிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துள்ளோம், அவை பின்வருமாறு..
சவுக்கு ஆசிரியர் எழுதிய இரண்டு பதிவுகள், மிஞ்சல் மூலம் நண்பர்கள் பகிர்ந்துகொண்ட ஐந்து கட்டுரைகளும், தினமணியில் வெளியான ஒரு தலையங்கம் உட்பட மூன்று பதிவுகளும், மறைந்த 103 வயதான S.A.P.வரதன் அவர்கள் துக்ளக்கில் எழுதிய 'பேச்சை குறை' என்ற கட்டுரை உட்பட மொத்தம் பதினேழு பதிவுகளும் இங்கு பகிர்ந்துள்ளோம்.
பதிவுகளைப் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் தமிழகத்தின் வானொலி கேட்கும் விதமாக ஹலோ FM இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வலைப்பூவில் எழுத விரும்புவோர்கான 'விதிமுறைகளும், நிபந்தனைகளும்' உள்ளடங்கிய PDF கோப்பு(PDF file) இவ்வலைப்பதிவில் எழுத விரும்புவோர்... என்ற தலைப்பின் கீழ இணைக்கப்பட்டுள்ளது.
இளைய தளத்தில் நமது வலைப்பூ நல்ல அங்கீகாரம் பெற்றிட தொடர்ந்து முனைந்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், நமது வலைபூவிற்கு வாசகர்கள் அணுக இணைப்பு கொடுக்க உதவும் தளங்களான தினமணி, tamil10, தமிழ்மணம், எழுத்து.காம், udaanz, முகநூல், orkut , ulavu போன்ற தளங்களுக்கு கருத்துக்களம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக