'என்ன அண்ணா, இன்னிக்கு தாமதமா வந்துருக்கீங்க' என்று ஒரு புன்னகையுடன் கேட்டு, முன் இருக்கையில் உட்கார்ந்தேன்.
அன்றைய தினம் (17/01/2012) பெங்களுருவில் காவலர்களுக்கும், வக்கீல்களுக்கும் அடிதடி நடந்து ஏழு மணி நேரம் பெங்களுருவை ஸ்தம்பிக்க வைத்திருந்தனர். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இவர்களே அடிதடியில் இறங்கும்போது, இவர்கள் எங்கிருந்து சட்டத்தை காக்கப் போகிறார்கள் என்று இரு துறையினரையும் சற்று நேரம் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும்போதே Horn அடித்தும் வழிவிடாமல் சென்ற பெண்மணியை 'ஜன்னல் வழியே' ஒரு அதட்டல் போட்டு Signalலில் காத்திருந்தோம்.
முகத்தில் ஒரு புன்னகை, சார் நானும் ஒரு தமிழன் தான் என்றார் 'பெருமையாக'.
எந்த ஊரு சார் உங்களுக்கு? என்றார்
பிறந்தது தஞ்சை ஜில்லா மன்னார்குடி. படிச்சதெல்லாம் ஓசூர், சென்னையில் கல்லூரி முடித்துவிட்டு இங்கு வந்துவிட்டேன், நீங்க? என்றேன்.
நான் பொறந்து வளந்ததெல்லாம் பெங்களுருதான், அப்பா அம்மா ஆரணி பக்கம் என்றார்.
பொங்கல் பேச்சுக்கு மறுபடியும் வந்தோம், நல்லா போச்சு சார் என்றார்.
அதுதான முக்கியமான பண்டிகை!!! அப்பா அம்மா படத்திற்கு படையல் வெச்சுட்டு பசங்களுக்கு புது துணி எடுத்துக்கொடுத்தேன் என்றார். நான் எட்டாவது படிக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க, அப்பா தான் பாத்துகிட்டாங்க...
(சொல்லிகொண்டிருக்கும் போதே கை பேசி ஒலிக்க.., )
Okay madam, I'll come at 8'o clock sharp for your pickup என்றார் ஆங்கிலத்தில் சரளமாக.
ஆச்சர்யமாக பார்த்த என்னை, எனது ஆச்சர்யத்தை புரிந்துக் கொண்டு இப்படி தான் சார் நேத்திக்கு ஒரு பெண்ணை அழைத்துபோக call பண்ணேன், நான் டிரைவர் தான் பேசறேன்னு சொன்னத அவங்க நம்பவே இல்ல. அப்றோம் வண்டில இருந்த மற்றொரு employeeய விட்டு அவங்க கிட்ட பேச சொன்னேன், அப்றோம் தான் நான் டிரைவர் அப்டிங்கறத நம்பினாங்க.
இங்க பாருங்க அவங்க மனிப்பு கேட்டு அனுப்பின message என்று அந்த SMSஐ காட்டினார்.
Sorry, my colleagues use to tease me with such prank calls, so I thought they are calling me, sorry again என்று அந்த பென்ன்மணி SMS அனுபியிருந்தார்.
அருமையா பேசறீங்க, எப்படி அண்ணா ஆங்கிலம் கத்துண்டீங்க என்றேன்.
நான் படிச்சது ஆங்கில வழி கல்வி சார், Diploma in IT Management படிச்சுட்டு இருந்த நேரம், கடைசி ரெண்டு semester இருக்கும்போது அப்பா இறந்துட்டார். ஒரு semester முழுதும் இரவுல auto ஓட்டி படிச்சேன், ஆனா மூணு அக்கா இருந்ததால நான் படிச்சு முடிச்சு அதுக்கு ஏத்த வேலை தேடி நான் சம்பாதிக்க காலம் இடம் கொடுக்கல.
மும்பை போனேன், ஒரு நாள் எதயச்செயா மழைக்கு தாதர்ல ஒரு பூங்கா கிட்ட ஒதுங்கி நின்னுட்டு இருந்தேன், அங்க இருந்த ஒர்த்தர் 'க்யா கர்த்தா ஹய் பேட்டா' (இதற்க்கு மேல தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன்!!) என்று கேட்டார், பெங்களுருவிலிருந்து வேலை தேடி வந்துருக்கிறேன் என்றேன். என்னிடம் வேலைக்கு சேந்துக்கரியா என்றார், சரி என்றேன்.
அவர் travels வைத்து நடத்திக்கொண்டிருந்தார். ஒரு வண்டியில் cleaner ஆக பணிபுரிந்தேன், அப்படியே அந்த ஓட்டுனரிடம் வண்டி ஓட்ட கத்துக்கொண்டேன், ஒரு வாரம் அந்த driver பீகார் போக, அந்த வருடம் மகாராஷ்டிராவில் காங்கிரசார் கலவரம் செய்துகொண்டிருந்தனர் (அப்பாவும் இவங்களுக்கு இதுதான் வேலையா-என்று மனதில் நினைத்துக்கொண்டேன்!), வண்டி கனாடியை உடைதுட போகிறார்களே என்று வண்டியை ஒரு சந்தில் விட்டேன், அதை பார்த்த owner, என்ன தம்பி, வண்டி ஓட்ட தெரியுமா என்று கேட்க நானும் 'ஓ! ஒட்டுவேனே' என்றேன், மறுநாளே LLRக்கு apply செய்ய வைத்து , பின் Licenceசும் வாங்கிக்கொடுத்தார்.
அப்படியே சில வருடம் மும்பை-கோவா ரூட்டில் tourist driver ஆக இருந்தேன், ஆங்கிலர், japanese ஆட்கள் அதிகமாக வருவார் அவர்களுடன் நல்லா பழகுவேன், அப்படியே நல்லா பேச பழகிக்கிட்டேன் என்றார்.
இது எப்படி என்றேன் வியப்பாக!
மும்பை, சென்னை, பெங்களுரு என்று L&T Infotech presidentக்கு personal டிரைவர் ஆக இருந்தேன், அவர் அடிக்கடி சும்மா இருக்க நேரத்துல ஏதாவது கத்துக்கோ என்பார், ஒரு நாள், நான் என்ன சார் கத்துக்கறது என்ற போது, தனது அலுவலகத்தில் Network Team இல் ஒருவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார், அங்கு சற்று Networking & Hardware கற்றுக்கொண்டேன், மற்ற நேரத்துல என்னை அங்குள்ள ஊழியர்களுக்கு email அனுப்ப சொல்லிக்கொடுத்தார் என்றார்.
அவரே என்னை PGDCA 12,000 ரூபாய் கொடுத்து படிக்க வைத்தார்,
பின் அவர் வெளிநாடு போனபோது எனக்கு ஒரு கம்ப்யூட்டர் அன்பளிப்பாக கொடுத்தார் என்றார். அப்படியே எனது ஆர்வம் காரணமாக Oracle படித்தேன். இன்று எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் அந்த கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறான் என்றார்.
நீங்க ஏன் cab ஓட்டனும், பேசாம வேலைக்கு சேர்ந்துட வேண்டியதுதான என்றேன்!
இல்ல சார், அதெல்லாம் set ஆகாது, இருபத்திரண்டு வருஷமா car ஓட்டறேன் அப்படிலாம் வந்துட முடியாது என்றார்!
தான் வாங்கிய Appreciation mailகளையும் (Printout) பெருமையுடன் காண்பித்தார்!
பணியிடம் வந்துசேர்வதற்கு சரியாக இருந்தது!
அண்ணா, உங்க பேர் என்றேன், பிரகாஷ் என்றார்!

பணியிடம் சென்றடைய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும், எவ்வளவு நேரம் தான் பாதி திறந்த ஜன்னல் வழியே அரைகுறையாக (வண்டியை!) ஓட்டும் பெண்களையும், Cycle Gap இல் சர்ரென்று ஓட்டும் இளைஞர்களையுமே வேடிக்கை பார்ப்பது., பொங்கல் எப்படி போச்சு அண்ணா என்று கேட்டு முடிக்கும் முன்.., ரொம்ப ஸ்ரமப்படரிங்களே கன்னடத்தில் பேச, உங்க தாய் மொழி என்ன என்றார், தமிழ் என்றேன்.
முகத்தில் ஒரு புன்னகை, சார் நானும் ஒரு தமிழன் தான் என்றார் 'பெருமையாக'.
எந்த ஊரு சார் உங்களுக்கு? என்றார்
பிறந்தது தஞ்சை ஜில்லா மன்னார்குடி. படிச்சதெல்லாம் ஓசூர், சென்னையில் கல்லூரி முடித்துவிட்டு இங்கு வந்துவிட்டேன், நீங்க? என்றேன்.
நான் பொறந்து வளந்ததெல்லாம் பெங்களுருதான், அப்பா அம்மா ஆரணி பக்கம் என்றார்.
பொங்கல் பேச்சுக்கு மறுபடியும் வந்தோம், நல்லா போச்சு சார் என்றார்.
அதுதான முக்கியமான பண்டிகை!!! அப்பா அம்மா படத்திற்கு படையல் வெச்சுட்டு பசங்களுக்கு புது துணி எடுத்துக்கொடுத்தேன் என்றார். நான் எட்டாவது படிக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க, அப்பா தான் பாத்துகிட்டாங்க...
(சொல்லிகொண்டிருக்கும் போதே கை பேசி ஒலிக்க.., )
Okay madam, I'll come at 8'o clock sharp for your pickup என்றார் ஆங்கிலத்தில் சரளமாக.
ஆச்சர்யமாக பார்த்த என்னை, எனது ஆச்சர்யத்தை புரிந்துக் கொண்டு இப்படி தான் சார் நேத்திக்கு ஒரு பெண்ணை அழைத்துபோக call பண்ணேன், நான் டிரைவர் தான் பேசறேன்னு சொன்னத அவங்க நம்பவே இல்ல. அப்றோம் வண்டில இருந்த மற்றொரு employeeய விட்டு அவங்க கிட்ட பேச சொன்னேன், அப்றோம் தான் நான் டிரைவர் அப்டிங்கறத நம்பினாங்க.
இங்க பாருங்க அவங்க மனிப்பு கேட்டு அனுப்பின message என்று அந்த SMSஐ காட்டினார்.
Sorry, my colleagues use to tease me with such prank calls, so I thought they are calling me, sorry again என்று அந்த பென்ன்மணி SMS அனுபியிருந்தார்.
அருமையா பேசறீங்க, எப்படி அண்ணா ஆங்கிலம் கத்துண்டீங்க என்றேன்.
நான் படிச்சது ஆங்கில வழி கல்வி சார், Diploma in IT Management படிச்சுட்டு இருந்த நேரம், கடைசி ரெண்டு semester இருக்கும்போது அப்பா இறந்துட்டார். ஒரு semester முழுதும் இரவுல auto ஓட்டி படிச்சேன், ஆனா மூணு அக்கா இருந்ததால நான் படிச்சு முடிச்சு அதுக்கு ஏத்த வேலை தேடி நான் சம்பாதிக்க காலம் இடம் கொடுக்கல.
மும்பை போனேன், ஒரு நாள் எதயச்செயா மழைக்கு தாதர்ல ஒரு பூங்கா கிட்ட ஒதுங்கி நின்னுட்டு இருந்தேன், அங்க இருந்த ஒர்த்தர் 'க்யா கர்த்தா ஹய் பேட்டா' (இதற்க்கு மேல தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன்!!) என்று கேட்டார், பெங்களுருவிலிருந்து வேலை தேடி வந்துருக்கிறேன் என்றேன். என்னிடம் வேலைக்கு சேந்துக்கரியா என்றார், சரி என்றேன்.
அவர் travels வைத்து நடத்திக்கொண்டிருந்தார். ஒரு வண்டியில் cleaner ஆக பணிபுரிந்தேன், அப்படியே அந்த ஓட்டுனரிடம் வண்டி ஓட்ட கத்துக்கொண்டேன், ஒரு வாரம் அந்த driver பீகார் போக, அந்த வருடம் மகாராஷ்டிராவில் காங்கிரசார் கலவரம் செய்துகொண்டிருந்தனர் (அப்பாவும் இவங்களுக்கு இதுதான் வேலையா-என்று மனதில் நினைத்துக்கொண்டேன்!), வண்டி கனாடியை உடைதுட போகிறார்களே என்று வண்டியை ஒரு சந்தில் விட்டேன், அதை பார்த்த owner, என்ன தம்பி, வண்டி ஓட்ட தெரியுமா என்று கேட்க நானும் 'ஓ! ஒட்டுவேனே' என்றேன், மறுநாளே LLRக்கு apply செய்ய வைத்து , பின் Licenceசும் வாங்கிக்கொடுத்தார்.
அப்படியே சில வருடம் மும்பை-கோவா ரூட்டில் tourist driver ஆக இருந்தேன், ஆங்கிலர், japanese ஆட்கள் அதிகமாக வருவார் அவர்களுடன் நல்லா பழகுவேன், அப்படியே நல்லா பேச பழகிக்கிட்டேன் என்றார்.
இது மட்டும் இல்ல சார், வார இறுதியில் ராஜாஜி நகரில் NICTயில் ( National Institute of Computer Technology ) Oracle-DBMS faculty யாக இருக்கிறேன் என்றார்.
இது எப்படி என்றேன் வியப்பாக!
மும்பை, சென்னை, பெங்களுரு என்று L&T Infotech presidentக்கு personal டிரைவர் ஆக இருந்தேன், அவர் அடிக்கடி சும்மா இருக்க நேரத்துல ஏதாவது கத்துக்கோ என்பார், ஒரு நாள், நான் என்ன சார் கத்துக்கறது என்ற போது, தனது அலுவலகத்தில் Network Team இல் ஒருவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார், அங்கு சற்று Networking & Hardware கற்றுக்கொண்டேன், மற்ற நேரத்துல என்னை அங்குள்ள ஊழியர்களுக்கு email அனுப்ப சொல்லிக்கொடுத்தார் என்றார்.
அவரே என்னை PGDCA 12,000 ரூபாய் கொடுத்து படிக்க வைத்தார்,
பின் அவர் வெளிநாடு போனபோது எனக்கு ஒரு கம்ப்யூட்டர் அன்பளிப்பாக கொடுத்தார் என்றார். அப்படியே எனது ஆர்வம் காரணமாக Oracle படித்தேன். இன்று எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் அந்த கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறான் என்றார்.
நீங்க ஏன் cab ஓட்டனும், பேசாம வேலைக்கு சேர்ந்துட வேண்டியதுதான என்றேன்!
இல்ல சார், அதெல்லாம் set ஆகாது, இருபத்திரண்டு வருஷமா car ஓட்டறேன் அப்படிலாம் வந்துட முடியாது என்றார்!
தான் வாங்கிய Appreciation mailகளையும் (Printout) பெருமையுடன் காண்பித்தார்!
பணியிடம் வந்துசேர்வதற்கு சரியாக இருந்தது!
அண்ணா, உங்க பேர் என்றேன், பிரகாஷ் என்றார்!
மிக அருமையான, முக்கியமான சம்பவத்தை தாங்கள் பகிர்ந்துள்ளீர்கள்..
பதிலளிநீக்குஉண்மையில் மிக ஆச்சரியமான விஷயம் தான்..
அவருடன் நல்ல ஒரு நட்புறவை வளர்துக்கொள்ளுங்களேன்..
இந்த காலத்தில் வாழ்க்கையில் ஒன்றுமே சாதிக்காதவர்களுக்கு விசிறியாக இருப்பதை விட
இது போன்று வாழ்ந்து வருபவர்களுக்கு நாம் ஒரு நண்பராக இருந்தாலே பெருமை தான்..
நன்றி..
நண்பன் பிரவீன் :)
Usually I wont read blogs which are lengthy. But Thanks to Praveen for sharing this on FB. I am glad I read this. Good one :-) sorry for not typing in tamil.
பதிலளிநீக்குநன்றி! பிரவீன்.
பதிலளிநீக்குWow, wonderfull...good one..
பதிலளிநீக்குalso visit my blog below if u have time..
http://www.sathivenkat.blogspot.in/2012/01/figure.html
நன்றி தோழரே.
பதிலளிநீக்குதங்கள் அடுத்தகருத்துதமிழில் இருக்க வேண்டும்என்று எதிர்பார்க்கின்றேன்.
நல்லதொரு பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் உங்களுக்கும் அந்த ஓட்டுனர் நண்பருக்கும். விதி வலியது என்பதற்கு ஓட்டுனர் நண்பர் ஒரு நல்ல உதாரணம்
நன்றி தோழரே...
பதிலளிநீக்குநம்மாளுங்க எங்கிருந்தாலும் புகுந்து விளையாடுவாங்க .......பிரகாஷ் கொஞ்சம் அதிகமாவே ......வாழ்த்துக்கள்..அப்புறம் வோர்ட் வெரிபிகேசன் வேணாம் ,,,நீக்குங்கள்..
பதிலளிநீக்குword verification நான் enable செய்யவில்லை நண்பரே! Anonymous can post comment என்று தான் கொடுத்துள்ளேன்!
பதிலளிநீக்கு