நன்றி: மின் அஞ்சலில் இந்த தொகுப்பை பகிர்ந்துகொண்ட நண்பர் பா.விஜய்
வயதானால் கருப்பை பிரச்சனை வராது...
நகரப் பேருந்துகளில் ஈனப்பிறவிகளிடம் இடிபட வேண்டியது இருக்காது...
மாதமொரு முறை அடிவயிற்று வலி தாங்க வேண்டியதில்லை...
சட்டங்கள் இருந்தும் குற்றங்களுக்கு ஆளாகமலிருக்கலாம்...
முக்கியத்துவ பட்டியலில் குடும்பத்தை பின் தள்ளி எப்பொழுதும் நம் தோழர்கள் முதலிடம் வகிப்பார்கள்...
சடங்கானால் ,சத்தமில்லாமல் இருப்பதை விட்டு,அலங்கார பொருளாக ஊர் முன் நிற்காமல் இருக்கலாம்...
காதலை ஏற்காவிட்டால் ஆசிட் வீச்சு வாங்காமல் இருக்கலாம்...
கல்யாணம், நகை, பட்டுப்புடவை, வளைகாப்பு ஆகியவற்றை நினைத்து கருக்கலைப்பு செய்யாமல் இருப்பார்கள்...
‘கணவனுக்கு கட்டுப்பட்டு போ’ என்ற அம்மாவின் அறிவுரை கேட்காமல் இருந்திருக்கலாம்...
அன்புக்கணவன் மூணாருக்கு அழைத்து போய், கொலை செய்ய மாட்டான்...
அந்தரங்காமாக எடுத்த புகைப்படத்தை முகப்புத்தகத்தில் போட்டதற்கு தற்கொலை செய்யாமல் இருக்கலாம்...
மூன்றாவது மனைவியாய் வாக்கப்பட்டு, பதின்நாங்காவது பிள்ளை பெறும் போது இறந்து, தாஜ்மஹால் பெற தேவை இல்லை...
மனைவியையும் எதிரியிடம் பந்தயப் பொருளாக வைக்கலாம்...
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, ஆசிரியரின் இச்சை பார்வைக்கு ஆளாக வேண்டாம்...
கணவனை இழந்தால் மதுரையை எரிக்க வேண்டி இருக்கும்...
ஆண்டவனே ஆனாலும் பதி சந்தேகப்படுவான்...
நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்...
குட்டைப் பாவாடைக்காக இல்லாமல் திறமைக்காக விளையாட்டில் புகழ் பெறலாம்...
பத்திரிகைகளிடமிருந்து தப்பிக்க உயிரை விலைக் கொடுக்க வேண்டாம்...
வலைப்பூவில்கூட தேனைத் தேடி, வண்டுகள் திரியாமல் இருக்கும்...
திடீரென்று நாம் துணிக்கடையில் உடை மாற்றியதை இணையதளத்தில் பார்க்க வேண்டாம்...
யார் ஆண்டாலும் 33%-காக போராட வேண்டாம்...
பேசாமல் நாமும் ஆணாகவே பிறந்திருக்கலாம் இல்லையா!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக