-->

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

தலையாயக் கடமை...


வெகுவான மாநிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. தற்காலத்தில் பெருகிவரும் வாகனங்கள், அதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெறிசல் போன்றவற்றை சமாளிக்க சாலைகளை அகலப்படுத்துவதில் தவறில்லை, பல வருடங்களாக வளர்ந்த மரங்களை ஒரு நொடியில் வெட்டிச் சாய்ப்பதை கண்டு எதுவும் செய்ய இயலாதவர்கலாகத்தான் இருக்கிறோம். வெட்டிய பின் சில பசுமை அமைப்புகள், மரங்களை வெட்டக்கூடாது என்று சில நடிகைகளை முன்னிறுத்தி பெங்களுருவில் அண்மையில் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்கும் வரை போராட்டம் செய்தனர். இதெல்லாம் என்றும் மாறாக் காட்சிகள்.

சிறு தொலைவிலிருக்கும் இடம் செல்ல, பல நேரம் நெரிசலில் சிக்கித்தவித்து, சமிக்ஞையில் பச்சை விழுந்தவுடன் வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றுக்கொண்டிருந்த மாலை சமயத்தில், பணி நேரம் முடிந்து வீடு திரும்ப சாலையோர நடைபாதையில் சென்று கொண்டிருந்தேன், பல இடங்களில் குழிகளும், குழாய்களும் நடைபாதையினை அடைத்துக்கொண்டிருந்தன. ஊனமற்றவர்கள் செல்லவே கடினமாக இருக்கும் பல இடங்களை கண் பார்வையட்ற்ற மாற்றுத்திரனாளி நண்பர்கள் கடக்கத்தான் செய்கிறார்கள்.

வெறும் மரினாக் கடற்கரையின் நடைப்பாதையினை சீரமைப்பதால், ஒய்யாரமாக நடைப்பயிற்சி செல்பவர்கள் தான் பயனடைவர், பல கோடிகளை செலவு செய்து சாலைகள் அமைக்கும் அரசாங்கம், சில கோடிகளை செலவிட்டு நடைபாதைகளை சீரமைப்பதன் மூலம் தான் உண்மையான பயனாளிகளுக்கு அவை சென்றடையும் என்பதனை உணர வேண்டியது அரசாங்கத்தின் தலையாயக் கடமை.
Blogger Widget

2 கருத்துகள்: