-->

ஞாயிறு, 19 ஜூன், 2011

கிடைத்தவை சில... தொலைந்தன பல...

கதைகளைக் கேட்டுக்கொண்டே உறங்கிய நாட்கள், பல வருடங்களாக விரிந்திருந்தன, நமது பள்ளிப்பருவத்தில்...
கதை சொல்லச் சொல்லி அப்பாவை நச்சரித்த நாட்களை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் 'அழகிய புன்னகை' பூக்கும் நம் முகத்தில்...

தெருக்களில் கண்ணாம்பூச்சி, நொண்டி, கில்லி, கோலி, ஓட்டப்பந்தயம் விளையாடிய காலம் போய்,
அப்படி பல விளையாட்டுக்கள் இருந்த சுவடே இல்லாமல் உருத்தெரியாமல் ஆகி,
கைப்பேசியை வைத்து விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும்போதும்;
காலையில் எழுந்தவுடன் இறைவன் படத்தையும், பெற்றோர் முகத்தையும் பார்த்து விழித்துக்கொண்டிருந்த காலம் சென்று, கைபேசியில் எத்தனை குறுஞ்செய்திகள் வந்துள்ளன, தவறிய அழைப்புகள் எத்தனை என்பதை பார்த்து விழிக்கும்போதும்,
'உயிரற்ற' ஒரு பொருளுக்கு 'இவ்வளவு' முக்கியத்தனம் தேவைதான என்றுதான் தோனுகிறது...
பண்டிகைகளை அதற்குரிய முறையில் சொந்தபந்தங்களோடு விமரிசையாக கொண்டாடிய கொண்டாடிய காலம்,

எப்பண்டிகையாக இருந்தாலும் 'தொலைகாட்சி' முன் கொண்டாடும் காலமாக மாறிவிட்டது...


ஐந்து பைசாவிற்கு சேமியா ஐஸ் வாங்கி ருசித்த காலம் போய்,
ஐந்து ரூபாய்க்கு என்ன கிடைக்கும், என்று அங்கலாய்த்துக்கொள்ளும் நாளாகிவிட்டது...

மொத்த படிப்பையும் சில ஆயிரங்களுள் படித்து முடித்து,
இன்று ஆரம்பப் பள்ளிக்கே ஆயிரங்களைக்க் கொட்டி,
தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் லகரங்களைக் கொட்டி,
கட்டண நிர்ணயத்திற்கு நீதிமன்ற வாசலில் காக்கும் காலம் இது...

இப்படியாக
நினைவலைகளை படர்த்திப் பார்த்தால்,

புதிதாக கிடைத்த சில தவிர, நாம் தொலைத்த(தவிர்க்க முடியாத)வை பல!!!
Blogger Widget

3 கருத்துகள்:

  1. இனி கடக்க இருப்பவர்களை
    நினைக்கத்தான் பயமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்று நம்புவோம்!
    தங்கள் கருத்துக்கு நன்றி ரமணி ஐயா...

    பதிலளிநீக்கு