சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...
முந்தைய அத்தியாயம் (6) படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து பெரிதாக கருத்துக்கள் ஏதும் வரவில்லை என்று எனக்கு வருத்தம். ஹ்ம்ம்.. ஆனால் கோடிகளை ஆயிரக்கணக்கில் கொள்ளை அடித்த கேடிகள் எல்லாம் நல்லவர்கள், மேஜையின் கீழ் கட்டுக்கட்டாக நோட்டுகளை கொடுத்தாலும் வாங்க தெரியாத மகான்கள் என்று "நியாயவாதி நீதிபதி" தீர்ப்பு கொடுத்ததை பார்த்து வந்த வருத்தத்தை விட இது பெரிதல்ல.
ராஜு... போயி ஒரு ரூபாய்க்கு பச்சைமிளகாய், ஒரு ரூபாய்க்குகருவேப்பிலை வாங்கிண்டு வா - என்று என் அம்மா நான் சிறு வயதில் இருக்கும்போது சொல்வார். பின்னர் அது இரண்டு ரூபாய்க்கு என்று மாறியது. அப்படியே எனக்கு கடலை மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் கொடுப்பார். நானும் ஓடி சென்று உடனே வாங்கி வருவேன். சிலருக்கு வீட்டு வாசலிலேயே மளிகை கடை இருக்கும். அண்ணாச்சி அரை கிலோ ரவை குடுங்க இதோ வந்து காசு தரேன் என்றும், பன்னீர் சோடா குடித்த பின்னர் காசு எடுத்து வர மறந்ததை தலையை சொரிந்த படியே அன்னே.. காசு கொண்டு வர மறந்துட்டேன், இதோ இருங்க எடுத்துட்டு வரேன் என்று சொன்ன அனுபவம் பலருக்கும் நடந்திருக்கும். கடைக்கு பதினைந்து ரூபாய் எடுத்து சென்று பத்து ரூபாய்க்கு துக்ளக் பத்திரிகை வாங்கி, ஒரு Rose Milkகும் குடித்துவிட்டு வருவேன்.
உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள், பழங்கள் வாங்க சென்றால் சில சமயங்களில் நாமே வியக்கும் படி விலை உயர்ந்திருக்கும். மழை வந்து வாழை தோப்பெல்லாம் வீணாகிடிச்சுப்பா அதான் இந்த தடவை சுகந்தம் பழம் (இது ஓசூர் ஸ்பெஷல் வாழை ரகம்!) விலை ஏறிடுச்சு என்றும் ரஸ்தாளியை டசன் இருபத்து ஐந்து ரூபாய்க்கே வாங்கி பழகி அதை தடால் என்று நாற்பது ரூபாய் என்று சொன்ன போதெல்லாம் ஒரு ஐந்து ரூபாய் குறைத்து கேட்டு வாங்கியது ஒரு காலம்.
வேலை கிடைத்த பின்னாட்களில், எவ்வளவோ பொருட்களெல்லாம் அநியாய விலை விற்க, வியர்வை சிந்தி நாளெல்லாம் ரோட்டில் கடைபோட்டு, தலையை சொரிந்தும், தொப்பையையும் தடவிக்கொண்டும் வரும் போலீசுக்கு ஓசியில் ஒரு டசன் பழம் கொடுத்து, தொந்தரவு தராமல் இருக்க அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுத்தும், மழை வரும்போது அப்படியே தள்ளுவண்டியை தார்பாய் போட்டு மூடி, ஓடி பின்னே இருக்கும் மருந்துக்கடையில் கதவருகே மழைக்கு ஒதுங்கியும், மாலைவேலையில் தள்ளுவண்டியின் கீழே பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலில் படிக்கும் தன் குழந்தை உட்கார்ந்து பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருக்கும்.
இதற்கு அடுத்தபடியாக பீரோவோ அல்லது சோஃபாவோ வாங்க கடைக்கு சென்றால், கடை முன்னே வைத்திருக்கும் மரச்சாமான்களின் மேல் ரோட்டில் செல்லும் வண்டிகளால் படிந்த தூசியை கடைக்கார பையன் தட்டிக்கொண்டிருப்பான். கடையில் இருக்கும் ஐந்து வித சோஃபாவில் ஒன்றை தேர்ந்தெடுத்து "என்ன பாய் நீங்க, நம்மக்கிட்டயே இந்த விலை சொல்றீங்க! கம்மிபண்ணுங்க பாய்..." என்று பதினோராயிரம் விலை சொன்ன சோஃபாவை ஒன்பதாயிரத்து முந்நூறு வரை பேரம்பேசி ஒரு minidor வேனில் பொருளுடன், இரண்டு ஆட்களை அனுப்பி வைப்பார் கடை முதலாளி. எவ்வளவு கனமாக இருந்தாலும் பாவம் அவர்களே இறக்கி, மாடி வீடோ, சந்தில் இருக்கும் வீடோ அவர்களே சுமந்துக்கொண்டு வந்து நம் வீட்டில் வைப்பார்கள்.
தெருவில் விநாயகர் வைக்க நன்கொடை கேட்டு வரும் பசங்களுக்கு நூறு ரூபாய்க்கு கீழ் கொடுத்தால் அடுத்த தடவை நாம் ரோட்டில் நடந்து செல்லும்போது பசங்கள் கூட்டம் நம்மை பார்க்கும் பார்வையே வேறு. ஆனால் நாம் வாங்கிய பொருளின் சுமையை தாங்கி வந்து வீட்டில் வைக்கும் கடைக்கார பையன்களுக்கு ஏதோ தர்மத்துக்கு பணம் கொடுப்பதாக பலருக்கு நினைப்பு. தாராள மனமுடையவர்களாக இருந்தால் ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுப்பர், சிலர் இருவருக்கும் சேர்த்து வெறும் நாற்பது ரூபாயை கொடுத்துவிட்டு ஏதோ பெரிதாக காசு மிச்சம் பிடித்ததாக வீட்டில் பீற்றிக்கொள்வர்!

இப்படியாக ஒவ்வொருநாளும் ஒரு அனுபவம். இதுதான் நம் நடைமுறையும் கூட. இதை மொத்தமாக தவறு என்று சொல்லவில்லை, இதில் எங்கெங்கே தவறு இருக்கிறது என்று சொல்ல ஆரமித்தால் அதற்கே தனி அத்தியாயம் தேவைப்படும்.
நம் நாட்டில் இவையெல்லாம் இப்படி இருக்க, இங்கே மேற்கண்ட இந்த விஷயங்களில் மட்டும் இந்நாட்டில் என்ன மாறுதல்கள் என்று பார்ப்போம்.
பெரும்பாலான மாநிலங்களில் இங்கிருக்கும் முக்கிய இந்திய மளிகைக்கடை Patel Brothers என்னும் கடை. பின் Subzi Mandi, அது இது என சில பெயர்களில் பல கடைகள் இருக்கும். நம் சமையலுக்கு தேவையான பொருட்களை இங்கு மட்டும் தான் வாங்க முடியும். பொன்னி அரிசி, சோனா மசூரி என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்து அரிசி வகைகளும், இதயம் நல்லெண்ணெய், நரசூஸ் காபி பொடி, நன்னாரி சர்பத் கூட கிடைக்கும். இங்கு கிடைக்கும் சில பொருட்கள் நம்மூரிலேயே இப்போதெல்லாம் தேடித் தேடித்தான் வாங்க வேண்டும்.
எந்த பொருளாக இருந்தாலும் என்ன விலை போட்டிருக்கிறதோ அந்த விலைதான்! நம்மூரிலேயே இப்போதெல்லாம் AC போட்டு மளிகை சாமான் விற்கும் கடைகளில் "என்னது! Ruchi palm oil எழுபது ரூபாயா! இதெல்லாம் நான் நாற்பத்தைந்து ரூபாய்க்குலாம் வாங்கியிருக்கேன்! ஹ்ம்ம்.. என்ன விலை விக்கறானுங்களோ!!" என்று எப்படி வாயைமூடி மனதுக்குலேயே விலை பேசிக்கொள்கிறோமோ அதுபோலத்தான் இங்கேயும். தோசைமாவு, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் சில நேரங்களில் அதிக விலை போல தோணினாலும் இவையெல்லாம் கிடைக்கின்றனவே அதுவே பெரிய விஷயம் என்று தான் தோணும். இப்போதெல்லாம் சில மாநிலங்களில் இருக்கும் அமெரிக்க கடைகளிலேயே நம் பருப்பு, அரிசி வகைகள் விற்க ஆரமித்துவிட்டனர். (இதை பார்த்து இந்த டிரம்ப் தாத்தா ஏதும் பண்ணாம இருக்கணும்!)
மளிகை சாமான்கள் தவிர, மரச்சாமான்கள், Chair, என்று எது வாங்கினாலும் தன் கையே தனக்கு உதவி தான்! அதாவது... நம்மூரில் வண்டியுடன் கூடவே வரும் கடை பசங்க, மினிடோர் வண்டி, போனால் போகட்டும் என்று நம் சுமையை தூக்கிவந்து வீட்டில் வைக்கும் கடை பையன்களுக்கு தருகிற ஐம்பது ரூபாய் இது எதுவும் இங்கே கிடையாது. இங்கே இந்த வீட்டு பொருட்கள் விற்கும் கடை இதுதான் என்று அவ்வளவு சிரிய பட்டியல் போட்டுவிட முடியாது.
Walmart, Costco, IKEA, Target, Matress Firm என்று எந்த கடைக்கு சென்றாலும் அந்த பொருள் எப்படி இருக்கும் என்று Sampleகாக ஒரு சோஃபாவோ, shelfபோ வெளியே வைத்திருப்பார்கள். எந்த பொருள் வேண்டுமோ அதை பக்கத்திலேயே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்திருப்பார்கள். இதுவே IKEA என்ற கடையில் பெரிய கிடங்கு போன்ற இடத்தில் பல ராக்குகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தந்த பொருள் எந்த ராக்கில் இருக்கிறது என்பதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு கடையை முழுதும் சுற்றி பார்த்து வெளியே செல்லும் இடத்தில் இந்த கிடங்கை தாண்டி billing கவுண்டர்க்கு செல்லும்போது பணத்தை கட்டிவிட்டு, எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் பெரிய்ய trolley இருக்கும், அதில் நாம் தான் அதை வைத்து தள்ளிக்கொண்டு வண்டியில் ஏற்றி, கயிறு கட்டி (வண்டி நிறுத்தும் இடத்திலேயே கயிறு பெரிய rollலில் இருக்கும்) எடுத்து செல்ல வேண்டும்.
எந்த பொருளாக இருந்தாலும் அட்டை பெட்டியினுள் அதற்கு தேவையான Screw, அதை திருகுவதற்கு திருகான் (screw டிரைவர் அல்ல, எளிதான திருகான் ஒன்று இருக்கும்), மற்ற அனைத்து தேவையான பொருட்களும், மேலும் அதை எப்படி assemble செய்வது என்பதற்கான வழிமுறைகளும் மிக தெளிவாக கொடுக்கப் பட்டிருக்கும். அதில் கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் பொருள் அதற்கான வடிவம் பெரும். எங்கள் வீட்டில் இருக்கும் நாற்காலி, கணினி வைக்கும் மேஜை, புத்தக அலமாரி, டிவி வைக்கும் மேஜை, Fan என்று எல்லாமே நானே தான் செய்தேன். இப்படித்தான் இங்கிருக்கும் எல்லோருமே செய்வார்கள்.
இப்படி ஒவ்வொன்றும் நாமே assemble செய்ய ஆரமித்தால்தான் ஒரு பொருள் வடிவம் பெற எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கும் என்று புரியும், அந்த பொருளின் சுமை தெரியும், "ச்ச... இதே நம்ம ஊரா இருந்தா இந்த தொல்லையே இல்ல" என்றுதான் எல்லோருக்கும் முதலில் தோணும், ஆனால் இப்படி நாமே செய்வதால் ஒவ்வொரு பொருளையும் மேலும் பொறுப்புடன் கையாளத் தோணும். நம் நாட்டில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சோம்பேறிகளாக இருந்தாலும் இங்கே வந்தால் வீட்டுப் பொருட்களின் சுமையை தானே தான் சுமக்கவேண்டும்!
நம் நாட்டில் இவையெல்லாம் இப்படி இருக்க, இங்கே மேற்கண்ட இந்த விஷயங்களில் மட்டும் இந்நாட்டில் என்ன மாறுதல்கள் என்று பார்ப்போம்.
நம்மூரில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும். குறிப்பாக நியூ ஜெர்சியில் கிடைக்காத, இந்தியாவில் விற்கும் பொருள் எது என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். மல்லிகைப்பூ, கனகாம்பரம், ரோஜாப்பூ, வெற்றிலை, காய்கறிகள், பருப்பு வகைகள், மற்ற சமையல் சாமான்கள், அம்பிகா அப்பளம், பதஞ்சலியின் நூடுல்ஸை சந்தையில் புழலவிட தற்காலிகமாக நம்மூரில் தடையிலிருந்த போதும் அந்த தடை செய்யப்பட்ட மாகி நூடுல்ஸ், வறட்டி, கோமியம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதை எல்லாம் முதலில் இங்குள்ள கடைகளில் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. இருக்காதா பின்ன!
இதில் விஷயம் என்னவென்றால், இங்கே காய்கறிகள் இறக்குமதி செய்தாலும் அதற்கு ஏதோ விதிமுறைகளெல்லாம் இருக்கின்றன, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சில மாதங்களுக்கு நம் நாட்டிலிருந்து பச்சைமிளகாய் இங்கே இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தார்கள். அதில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தின் தன்மை அதிகமாக காணப்பட்டதால் அதை தடை இந்தியாவிலிருந்து இங்கே ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு தடை விதித்திருந்தார்கள். இதை ஆராய ஒரு அமைப்பு இருப்பதே அப்போதுதான் எனக்கு தெரியும். இங்கே ஏற்றுமதிக்கு தடை என்றால், அந்த சமயத்தில் அதை நம் நாட்டில் நம் தலையில் கட்டி ஏகபோகமாக விற்றிருப்பார்கள். ஹ்ம்ம்...
பெரும்பாலான மாநிலங்களில் இங்கிருக்கும் முக்கிய இந்திய மளிகைக்கடை Patel Brothers என்னும் கடை. பின் Subzi Mandi, அது இது என சில பெயர்களில் பல கடைகள் இருக்கும். நம் சமையலுக்கு தேவையான பொருட்களை இங்கு மட்டும் தான் வாங்க முடியும். பொன்னி அரிசி, சோனா மசூரி என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்து அரிசி வகைகளும், இதயம் நல்லெண்ணெய், நரசூஸ் காபி பொடி, நன்னாரி சர்பத் கூட கிடைக்கும். இங்கு கிடைக்கும் சில பொருட்கள் நம்மூரிலேயே இப்போதெல்லாம் தேடித் தேடித்தான் வாங்க வேண்டும்.
எந்த பொருளாக இருந்தாலும் என்ன விலை போட்டிருக்கிறதோ அந்த விலைதான்! நம்மூரிலேயே இப்போதெல்லாம் AC போட்டு மளிகை சாமான் விற்கும் கடைகளில் "என்னது! Ruchi palm oil எழுபது ரூபாயா! இதெல்லாம் நான் நாற்பத்தைந்து ரூபாய்க்குலாம் வாங்கியிருக்கேன்! ஹ்ம்ம்.. என்ன விலை விக்கறானுங்களோ!!" என்று எப்படி வாயைமூடி மனதுக்குலேயே விலை பேசிக்கொள்கிறோமோ அதுபோலத்தான் இங்கேயும். தோசைமாவு, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் சில நேரங்களில் அதிக விலை போல தோணினாலும் இவையெல்லாம் கிடைக்கின்றனவே அதுவே பெரிய விஷயம் என்று தான் தோணும். இப்போதெல்லாம் சில மாநிலங்களில் இருக்கும் அமெரிக்க கடைகளிலேயே நம் பருப்பு, அரிசி வகைகள் விற்க ஆரமித்துவிட்டனர். (இதை பார்த்து இந்த டிரம்ப் தாத்தா ஏதும் பண்ணாம இருக்கணும்!)
எங்கள் ஓசூரில் தயாராகும் GRB நெய் இங்கே கிடைக்கிறது! |
மன்னார்குடியில், மயிலாடுதுறையில் என் சிறு வயதுமுதல் விரும்பிக் குடித்த நன்னாரி சர்பத் இங்கே கிடைக்கிறது! |
Walmart, Costco, IKEA, Target, Matress Firm என்று எந்த கடைக்கு சென்றாலும் அந்த பொருள் எப்படி இருக்கும் என்று Sampleகாக ஒரு சோஃபாவோ, shelfபோ வெளியே வைத்திருப்பார்கள். எந்த பொருள் வேண்டுமோ அதை பக்கத்திலேயே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்திருப்பார்கள். இதுவே IKEA என்ற கடையில் பெரிய கிடங்கு போன்ற இடத்தில் பல ராக்குகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தந்த பொருள் எந்த ராக்கில் இருக்கிறது என்பதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு கடையை முழுதும் சுற்றி பார்த்து வெளியே செல்லும் இடத்தில் இந்த கிடங்கை தாண்டி billing கவுண்டர்க்கு செல்லும்போது பணத்தை கட்டிவிட்டு, எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் பெரிய்ய trolley இருக்கும், அதில் நாம் தான் அதை வைத்து தள்ளிக்கொண்டு வண்டியில் ஏற்றி, கயிறு கட்டி (வண்டி நிறுத்தும் இடத்திலேயே கயிறு பெரிய rollலில் இருக்கும்) எடுத்து செல்ல வேண்டும்.
இப்படி விலைப்பட்டியலில் எந்த ரேக்கில் இந்த பொருள் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கும். |
இப்படி அந்த ராகில் நாம் வாங்கப் போகும் பொருள் அட்டைப்பெட்டியில் இருக்கும். |
இப்படி ஒவ்வொன்றும் நாமே assemble செய்ய ஆரமித்தால்தான் ஒரு பொருள் வடிவம் பெற எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கும் என்று புரியும், அந்த பொருளின் சுமை தெரியும், "ச்ச... இதே நம்ம ஊரா இருந்தா இந்த தொல்லையே இல்ல" என்றுதான் எல்லோருக்கும் முதலில் தோணும், ஆனால் இப்படி நாமே செய்வதால் ஒவ்வொரு பொருளையும் மேலும் பொறுப்புடன் கையாளத் தோணும். நம் நாட்டில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சோம்பேறிகளாக இருந்தாலும் இங்கே வந்தால் வீட்டுப் பொருட்களின் சுமையை தானே தான் சுமக்கவேண்டும்!
நிறைவடைந்த வடிவில் புத்தக அலமாரி. சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த துக்ளக். கடந்த செப்டம்பரில் வாங்கியது. அவர் நினைவாக வைத்துள்ளேன். |
அடுத்த அத்தியாயம் விரைவில்...
போக்குவரத்து - என்ற தலைப்பில் பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் எடுத்த புகைப்படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பென்சில்வேனியாவில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமம் - பார்கவ் கேசவன், ஒசூர் என்ற பெயரில் எனது படம் இடம் பெற்றிருக்கும். அதற்கான இணைப்பு இங்கே http://www.bbc.com/tamil/arts-and-culture-42456053
இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
You can get assembled furniture in Roomstore or living spaces or Copenhagen. They are pretty expensive. Some times, they offer free delivery. In IKEA, they provide a list of people who does furniture assembly for a charge, delivery is pretty expensive ($99 or more)
பதிலளிநீக்குஎழுதுவது உங்கள் கடமை. பின்னூட்டம் போடுவதும் போடாததும் எங்கள் பிறப்புரிமை.
பதிலளிநீக்குஇதுதான் இன்றைய பதிவுலகப் பொன்மொழி. பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் பாட்டுக்கு எழுதித் தள்ளுங்கள்.
@தெய்வா - புதிய கடைகளை பற்றிய தகவலுக்கு நன்றிகள். நியூ ஜெர்சி மற்றும் பக்கத்து மாநிலங்களில் இந்த கடைகளில் பெயர்களை கேட்டதில்லை. ஆம், IKEAவில் பொருளின் விலையைவிட சிலசமயங்களில் டெலிவரி கூலி அதிகமாக இருக்கும்!
பதிலளிநீக்கு@ப.கந்தசாமி அவர்களே - ஹாஹா ஆமாம்... சரியாக சொன்னீர்கள். கவலையெல்லாம் படவில்லை, 2ஜி தீர்ப்பை சுட்டிக் காட்டத்தான் சொல்லத்தான் அப்படி சொன்னேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள் :)
பதிலளிநீக்குWonderful Article!
பதிலளிநீக்குAuthor and I have have discussed at length when 2G Scam came to spotlight and predicted this verdict back then. I share the disappointment with the author even though we predicted this.
Sugantham Banana ? Never heard of this, I will try it next time I visit Hosur. Please write on article on it with your memories to make it interesting :)
Very well thought and written article ji, especially about assembling furnitures. I have never noticed the book shelf that you bought, looks good and compact.
IKEA is coming to India - http://www.thehindubusinessline.com/companies/ikea-to-set-up-first-indian-store-by-2018/article9835389.ece
When you get time, please start a video series to tell us the books you read and apps you use. Something like What is in my Tech Backpack,what is in my bookshelf videos.
Please accept my apologies, I am relatively new to the MAC world and yet to figure out how to use Tamil Keyboard.
வணக்கம் மதன் ஜி... தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி :)
பதிலளிநீக்குஆம், 2ஜி பற்றி நீதிமன்றத்தில் விவாதித்ததை விடவும் நாம் விரிவாக பேசியிருக்கிறோம். மிக வருத்தமான தீர்ப்பு.
சுகந்தம் ஓசூரின் செல்லப்பிள்ளை. அவசியம் ருசியுங்கள்.
எனக்கு பிடித்த கடைகளில் முக்கியக் கடை, IKEA.
IKEA இந்தியாவுக்கு வரும் செய்தி எனக்கு புதிது, மிக்க நன்றி. IKEA இந்தியாவுக்கு வருவது கூட பெரிதல்ல, அவர்களுக்கு தேவையானதை லஞ்சம் வாங்காமல், மரியாதையுடன் வேண்டியதை வழங்கினால் நம் நாட்களுக்கு தான் நன்மை. இல்லையேல் நம் மக்களிடம் தான் அதிக விலைக்கு விற்க ஆரமிப்பார்கள்.
அவசியம் தங்களுக்காக சில மென்பொருள் காணொளிகளை பதிவு செய்கிறேன்.
தங்கள் விரிவான கருத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றி மதன் ஜி :)